தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கை வருகிறார்

Written by vinni   // November 12, 2013   //

South -Africaஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவென தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஸுமா இலங்கை வரவுள்ளார்.

இத்தகவலை தென்னாபிரிக்கா உறுதி செய்துள்ளது.

இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நிலையான வளர்ச்சி, கடன் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், பெண் சமத்துவம், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சட்டம், பல்தரப்பு வர்த்தக விவகாரங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவுள்ள 7 நாடுகளின் பிரதிநிதிகள் இதுவரை இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.