ஆசாராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Written by vinni   // November 12, 2013   //

asramசர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை சூரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் நாராயண் சாய் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று, அவருக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதன்பிறகும் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை.


Similar posts

Comments are closed.