தனது சொந்த மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது

Written by vinni   // November 12, 2013   //

rapeபுத்தளம் பிரதேசத்தில் 13 வயதான சிறுமியை பல சந்தர்ப்பங்களில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 38 வயதான சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கொட்டுகச்சிய – எதுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியாவார்.

சிறுமி குறித்த பிரதேச பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

இவரது தாயார் வேலைவாயப்புக்காக வெளிநாட்டு சென்றுள்ளார் என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சிறுமி தனது தங்கைகள் இருவருடன் தந்தையின் பாதுகாப்பில் வசித்து வருகிறார்.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தந்தையால் தான் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னதாக சிறுமியின் பாட்டியினால் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.

இதன்படி விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சிறுமி பல தடவைகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.


Similar posts

Comments are closed.