சுக்கு நூறாக சிதைந்த விண்கலம் பூமியில் விழுந்தது (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 12, 2013   //

satellite_earth_001விண்வெளியில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்ட நிலையில் செயற்கைகோள் ஒன்று, சுக்கு நூறாக சிதைந்து பூமியில் விழுந்தது.
கடந்த 2009ம் ஆண்டு கடல் ஆராய்ச்சிக்காக ஜோஸ் என்ற செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் செலுத்தியது.

இந்த விண்கலம் 4 வருட காலமாக பெருங்கடல், கடல் மட்டம், பனிப்பாலங்களின் செயல்பாடுகள் மற்றும் பூமியின் உட்புறம் குறித்த அரிய தகவல்களை அனுப்பி ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியது.

ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 21ம் திகதி எரிபொருள் முற்றிலும் தீர்ந்து விட்டது.

இதையடுத்து, அதன் சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது.

இது எங்கு, எப்போது விழும், என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பீதி நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பூமியின் வளிமண்டலத்திற்குள் காலாவதியான விண்கலம் நுழைந்தது.

அது அண்டார்டிகா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மேலாக சைபீரியாவின் வளிமண்டலத்தில் பாய்ந்து வந்தபோது உராய்வு காரணமாக அது சுக்கு நூறாக சிதைந்து போனது.

இருப்பினும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Similar posts

Comments are closed.