சச்சின் தெண்டுல்கரே சிறந்த ஆட்டக்காரர் : வார்னே

Written by vinni   // November 11, 2013   //

20-shane-warne-300கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் வருகிற 14–ந்தேதி தொடங்கும் 2–வது டெஸ்ட் அவரது கடைசி டெஸ்ட் ஆகும்.

199 டெஸ்டில் விளையாடியுள்ள தெண்டுல்கருக்கு மும்பை போட்டி 200–வது டெஸ்ட் ஆகும்.

இந்த நிலையில் தெண்டுல்கரை ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷான் வார்னே பாராட்டியுள்ளார். எனது தலைமுறையில் தெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

எனது கிரிக்கெட் சகாப்தத்தில் தெண்டுல்கர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது கடைசி டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறேன்.

அனைத்து பவுலர்களுக்கு எதிராக எல்லா விதமான ஆடுகளத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர் தெண்டுல்கர். அவரை போன்ற வியக்கத்தக்க பேட்ஸ்மேனை பார்த்தது இல்லை. இன்னொரு தெண்டுல்கரை இனி பார்க்க இயலாது. நான் பயிற்சி அளிக்கும் இளம் வீரர்களுக்கு அவரை தான் முன்னிறுத்தி ஆலோசனை வழங்குவேன். ஏனென்றால் பல்வேறு உலக சாதனைகளை புரிந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் வார்னே அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2–வது இடத்தில் உள்ளார். அவர் 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

இதேபோல உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான லாராவும் தெண்டுல்கரை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:–

கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளை தெண்டுல்கர் புரிந்துள்ளார். குத்துச்சண்டையில் முகமது அலி, கூடைப்பந்தில் மைக்கேல் ஜான்சன் எப்படியோ அதுபோல கிரிக்கெட்டில் சச்சின். கிரிக்கெட் என்றாலே அனைவரும் சச்சினை பற்றி தான் பேசுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லாராவும் தெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்கிறார்.


Similar posts

Comments are closed.