அதிக உயரத்தால் அவஸ்தைப்படும் மனிதர்

Written by vinni   // November 11, 2013   //

santhosh_kumar_002அதிக உயரத்தால் நினைத்ததை சாதிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் இந்தியாவின் உயரமான மனிதர் சந்தோஷ் குமார்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(வயது 40).

இவர் சமீபத்தில் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். சிறுவயதில் இருந்தே உயரமாக இருந்ததால் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதுகூட கடைசி பெஞ்சில்தான் இருப்பேன்.

எனக்கு பொலிஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசை, கல்லூரி படிப்பை முடித்து கொண்டு பொலிசில் சேர்வதற்காக சென்றேன்.

ஆனால் அதிக உயரமாக இருப்பதாக கூறி தெரிவு செய்ய மறுத்துவிட்டனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் வேடிக்கை விருந்தினராக சென்று வருகிறேன்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை ஓட்டுகிறேன்.

இந்தியாவின் உயரமான மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் தனக்கு பெருமையாக இருப்பதாகவும், இதற்கான அத்தாட்சியாக லிம்கா புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.