மம்தா பேனர்ஜி ஒரு டைனமோ: கமல்ஹாசன்

Written by vinni   // November 11, 2013   //

kamalhassan-tamil-cinema-news-tamil-movies-13-07-13கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மம்தா பானர்ஜி ஆற்றலில் ஒரு டைனமோ என்று உலகநாயகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேற்கு வங்காள அரசின் சார்பில் தலைநகரில் 19வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நேதாஜி உள்ளரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இவ்விழாவை துவக்கி வைக்க வந்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது இருக்கையில் இருந்து எழுந்து, பம்பரமாக சுழன்று மேடை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.

இதை கண்டு வியந்த நடிகர் கமல் ஹாசன், உங்கள் முதல் மந்திரியின் வேகத்தை நான் இப்போது தான் முதல் முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஒரு முதல் மந்திரியை எதிர்பார்த்து இந்த விழாவுக்கு வந்த நான் ஒரு சகோதரியை கண்டுபிடித்தேன்.

நாற்காலியில் வெகுநேரம் அமர்ந்திருப்பதில் ஆர்வமில்லாத அவர் ஆற்றலில் டைனமோ போல மேடையில் சுற்றி சுழன்றுக் கொண்டிருந்தார் என்றும் ஒரு விசேஷ வீட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கும் குடும்பத்தலைவியின் பாங்கினை அவரது அணுகுமுறையில் காணமுடிந்தது எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவரை நீங்கள் எல்லாம் ‘தீதி’ (அக்கா) என்று அழைப்பதன் அர்த்தம் எனக்கு இப்போது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.