‘சிங்’ வரிசையில் முதலிடம் பிடித்த மன்மோகன் சிங்

Written by vinni   // November 11, 2013   //

உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.
உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியல் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhiஇந்த பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர், அறிஞர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.

திட்டக் கமிஷன் துணை தலைவரான மான்டெக் சிங் அலுவாலியா உலகின் இரண்டாவது அதிகாரமிக்க சீக்கியராக உள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதலுக்கு இந்த பட்டியலில் நான்காவது இடம் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தில் சீக்கிய தலைவரான ஜாதேதர் சிங் சாஹிப் கியானி குர்பசன் சிங் உள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரண் கௌர் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் மிகவும் அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான குஷ்வந்த் சிங் 22வது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு அதிகாரமிக்க சீக்கியர்கள் பட்டியலில் 28வது இடம் கிடைத்துள்ளது.


Similar posts

Comments are closed.