சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கையை சென்றடைந்தார்

Written by vinni   // November 11, 2013   //

callum-macrae-channel-4சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மக்ரே இலங்கைக்கு எதிராக சில காணொளிகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மக்ரேவின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்திற்கு அருகாமையில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருரூனின் ஊடகக் குழுவில் மக்ரேவும் உள்ளடங்குகின்றார்


Similar posts

Comments are closed.