பிள்ளையார், லஷ்மி படம் பொறித்த பியர் போத்தல்களை மீள‌ப் பெற கோரிக்கை

Written by vinni   // November 11, 2013   //

beer_bottle_001இந்துக்களின் கடவுளர்களான பிள்ளையார் மற்றும் லஷ்மியின் படங்களை பொறித்த பியப் போத்தல்களை மீளப் பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்து கடவுளர்களின் படங்களை பொறித்த மதுபான வகைகளில் ஒன்றான பியர் போத்தல்களில் படம் பொறிக்கப்பட்டமைக்கு அவுஸ்திரேலிய இந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜன் செட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜன் செட் கூறுகையில்,

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மது போத்தல்களில் இந்து கடவுள்கள் படங்களை பொறித்து வருவது வழக்கமாகி விட்டது.

இப்போது அவுஸ்திரேலிய கம்பெனி ஒன்று அனுப்பிய பீர் பாட்டில்களில் பிள்ளையார், லட்சுமி படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் வேதனையான விஷயம்.

இந்துக்கடவுள் என்று கூட தெரியாமல் இப்படி நிறுவனம் செய்துள்ளது. பல நாடுகளுக்கு அனுப்பிய பியர் போத்தல்களை உடனே வாபஸ் பெற வேண்டும்.

இந்த சர்ச்சைக்கிடமான பியர் போத்தல்களை திருப்பி அனுப்பிவிட வினியோகஸ்தர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பீர் பாட்டில்களை திருப்பி அனுப்பும்படி அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய மது தொழிற்சாலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட பீர் பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த பியர் போத்தல்களை பார்த்த உள்ளூர் இந்துக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர்


Similar posts

Comments are closed.