மஹிந்த இனி மெதமுலன அன்றி பொதுநலவாய அமைப்பு தலைவராக செயற்பட வேண்டும்

Written by vinni   // November 11, 2013   //

mahinda_rajapaksaஇன்னும் ஓரிரு தினங்களில் பொதுநலவாய அமைப்பு தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்ததும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு அவர், மெதமுலன தலைவராக அன்றி பொதுநலவாய அமைப்பு தலைவராக செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவி கிடைத்த பின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 16 கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

´பொதுநலவாய அமைப்பு கொள்கையின்படி முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்கியது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

ஷிராணி பண்டாரநாயக்க நீக்கம் குறித்து பொதுநலவாய அமைப்பு செயலாளர் நாயகத்திற்கு இரண்டு தரப்பு அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. அது அவரது மேசையில் உள்ளது.

சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விசா சட்டத்தை மீறியதாக கூறப்படுகின்ற போதும் ஜேம்ஸ் பெக்கர் அதனை செய்யும் போது அவருக்கு எதிராக ஒன்றுமில்லை.

ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன், சம்பந்தனை சந்தித்து பேச முடியும் என்றால் அவர்கள் வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏன் பேச முடியாது?

ஐதேகவின் புதிய தலைமைத்துவ சபையின் ஆரம்பக்கூட்டம் எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறும்.

சஜித் பிரேமதாஸ தலைமைத்துவ சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி வேறு இடத்தில் ஊடக சந்திப்பு நடத்துவது குறித்து தலைமைத்துவ சபை ஆராயும்.

இந்திய பிரதமர் மாநாட்டிக்கு வராமல் இருப்பதன் மூலம் இலங்கை அயல் நாட்டுடன் பேணும் இராஜதந்திர உறவு அம்பலமாகிறது´ என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.