வடக்கிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து வைப்பு

Written by vinni   // November 11, 2013   //

mediaபொதுநலவாய மாநாட்டையொட்டி இலங்கை சென்றுள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலர் இன்று வடக்கிற்கு விஜயம் செய்ய முற்பட்வேளையில் வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனல் 4 நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்துள்ளனர் என புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்தே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டநேர விசாரணைகளின் பின்னரே இவர்களில் சனல் 4 ஐச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதனை உறுதி செய்ததையடுத்து, தடைசெய்த ஊடகவியலாளர்களை வடக்கிற்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

கார் ஒன்றில் வடக்கு நோக்கி முதலில் சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களை வவுனியா கல்குணாமடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் சுமார் அரை மணி நேரத்தின் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனுமதித்த போதிலும் ஓமந்தை சோதனைச் சாவடியிலும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வான் ஒன்றில் வடக்கு நோக்கி பயணித்த சில சர்வதேச ஊடகவியலாளர்கள் மீண்டும் கல்குணாமடு பொலிஸ் காவலரணில் சுமார் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் தொடர்பிலான விபரங்களைப் பெற்றதன் பின்னரே வடக்கு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.