மங்கள்யானின் சுற்றுப் பாதையை அதிகரிப்பதில் கோளாறு

Written by vinni   // November 11, 2013   //

MangalyaanflightplanSMALLசெவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் முதலில் பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அந்த சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தப்பட்டது. முதல் மூன்று சுற்றுப்பாதையில் அதிகரிக்கும் பணி வெற்றி கரமாக நடந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக எரிபொருள் செயல்படுவது இயக்கப்பட்டது.

ஆனால் மங்கள்யானில் உள்ள அந்த கருவி திட்டமிட்டப்படி இயங்க வில்லை. இதன் காரணமாக மங்கள்யான் விண்கலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.

இந்த தகவலை இஸ்ரோ நிறுவனம் உறுதி செய்தது.

நேற்று இரவு மங்கள்யானில் உள்ள கருவி செயல்படாவிட்டாலும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது. அப்போது வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Similar posts

Comments are closed.