ஈரான் நாட்டின் மந்திரியை பாதுகாவலரே சுட்டுக் கொன்றார்

Written by vinni   // November 11, 2013   //

e4566e3d-8a1a-4cb0-a290-8bd713a1c5e3_S_secvpfஈரான் அதிபர் ஹசன் ரவுகானியின் மந்திரிசபையில் தொழில்துறை துணை மந்திரியாக பதவி வகிப்பவர், சஃப்தார் ரஹ்மதபாடி.

தலைநகர் டெஹ்ரானின் கிழக்கு பகுதியில் சஃப்தார் ரஹ்மதபாடி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வேளையில் மந்திரியை அவரது பாதுகாவலர்களில் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

தலை மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் காருக்கள் சுருண்டு விழுந்த மந்திரி சம்பவி இடத்திலேயே பலியானார்.

எனினும், பாதுகாவலரால் மந்திரி சுட்டுக் கொல்லப்பட்டதை ஈரான் அரசு இன்னும் உறுதிபடுத்தவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை அரசு வழக்கறிஞர் ஒருவரை அவரத பாதுகாவலரே சுட்டுக்கொன்ற அதிர்ச்சியில் இருந்து ஈரான் மக்கள் இன்னும் மீளவில்லை.

இந்நிலையில், மந்திரி ஒருவரையும் அவரது பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.