தமிழ்மக்களின் எதிர்ப்பால் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை- சல்மான் குர்ஷித்

Written by vinni   // November 11, 2013   //

1297502103salman-kurshid2இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்கு நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அனைத்து தமிழக கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தும், சில அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சல்மான்குர்ஷித் கூறியதாவது:–

பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற முடிவை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்க கூடாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வடமாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பும் அவர் கலந்து கொள்ளாததற்கு முக்கிய காரணமாகும். காமன்வெல்த் மாநாட்டின் எல்லா கூட்டங்களிலும் பிரதமர் கலந்து கொண்டது இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதது குறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையுடன் இந்தியா உறவு வைத்துள்ளது.

இந்தியா, இலங்கையுடன் வைத்துள்ள உறவை திடீர் என்று முறித்துக் கொள்ள இயலாது. தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது.

அதில் மீனவர்கள் பிரச்சினை மிக முக்கியமானது. இதை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது.

இவ்வாறு சல்மான்குர்ஷித் கூறினார்.


Similar posts

Comments are closed.