இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர்

Written by vinni   // November 10, 2013   //

indiateam_newjersey_001இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சரை தெரிவு செய்ய ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு யூன் 2ம் திகதி இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சகாரா நிறுவனம் ரூ.4723 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சியில் பெரும் பங்காற்றிய சகாரா, பின்னர் 2008ம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கப்பட்ட போது, ஒரு அணியை வாங்க முயற்சித்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இம்முயற்சியினை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்திவிட்டது.

பின்னர் 2010ல் ஒருவழியாக புனே அணியை வாங்கியது, இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் புனே அணியின் ஸ்பான்சரில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஆனால் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ல் புனே அணி உரிமத்தை பி.சி.சி.ஐ ரத்து செய்தது. இப்போது 9 மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சரை தெரிவு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ செயலர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆண்கள் 19 வயது ‘ஏ’ அணி மற்றும் பெண்கள் அணிக்கு 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் 2017ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி வரை ஸ்பான்சர் செய்ய புதிய ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்காக ரூ.2 லட்சம் மதிப்புள்ள விண்ணப்பங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 11ம் திகதி முதல் டிசம்பர் 7ம் திகதி வரை கிடைக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 9ம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்கப்படும் என்றும், அன்றைய தினங்களில் ஒப்பந்தங்கள் சரிபார்க்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட ஸ்பான்சர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.