ராமாயணத்தை புகழும் இங்கிலாந்து பிரதமர்

Written by vinni   // November 10, 2013   //

ramayanamஇங்கிலாந்துவாசிகள் ராமாயணத்தை கற்பதன் மூலம் சமுதாயத்தையும், குடும்பத்தையும் மேம்படுத்த முடியும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், தீபாவளியை முன்னிட்டு அவரது இல்லத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த 21ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மிக முக்கிய நட்பு நாடாக இந்தியா விளங்கி வருகிறது.

இங்கிலாந்து தன்னை மேலும் மேலும் வளர்த்து கொள்வதற்கு இந்தியாவின் நட்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

ஐரோப்பாவுடன் இணைந்து நமது பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு முதலீடுகளை செய்து வருகிறது.

அதேபோல், இந்தியாவில் முதலீடு செய்துள்ள முதல் 3 நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. நான் பிரதமரான பிறகு 3 முறை இந்தியா சென்றுள்ளேன்.

இந்தியாவிடம் இருந்து இங்கிலாந்து கற்று கொள்ள ஏராளமானவை உள்ளன.

நான் ராமாயணத்தை படித்துதான் இந்து மதத்தை புரிந்து கொண்டேன், அது ஒரு அற்புதமான அனுபவம்.

ராமாயணத்தை கற்றுக் கொள்வது என்பது சமுதாயத்தை மேம்படுத்த, குடும்பத்தை மேம்படுத்த, தனி மனிதனை மேம்படுத்த உதவும்.

இந்த மதிப்பீடுகள் யாவும் இங்கிலாந்துக்கு மிகவும் பயன்பட கூடியவை என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.