தென்னாபிரிக்கா மாதிரியிலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் முயற்சி

Written by vinni   // November 10, 2013   //

srilanka flgஇலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தென்னாபிரிக்க மாதிரியிலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவில் இன முரண்பாடுகளை களைவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

உரிமைகள், இருப்பிடங்களை இழத்தல், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆராய்ந்து தீர்வு வழங்கியிருந்தது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக பேராயர் டெஸ்மன் டுட்டு கடமையாற்றினார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அபராதம் விதித்தல், நட்டஈடு வழங்குதல், தண்டனை விதித்தல் என பல்வேறு அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு காணப்பட்டது.

இதேபோன்றதொரு பொறிமுறைமையை உருவாக்கி அதன் மூலம் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.


Similar posts

Comments are closed.