இந்தியச் செய்தி உலகின் தலை சிறந்த 10 சுற்றுலா தளங்களின் பட்டியலில் கேரளா

Written by vinni   // November 10, 2013   //

keralaஉலகின் பிரபல சுற்றுலா தலங்களை வரிசைப்படுத்தும் ‘லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களை பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பிரகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.

பசுமையான இயற்கை சூழலில் அழகிய கடற்கரைகள், நீர் நிலைகள், தேசிய பூங்காக்கள், யானை காப்பகங்கள் போன்றவை இங்கு உள்ளன.

மேலும், இந்தியாவின் இதர இடங்களை போல் இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாகவும் கேரளா இருப்பதால் 2014-ல் விடுமுறையை கழிக்க தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக கேரளாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ‘லோன்லி பிளானட்’ தெரிவிக்கின்றது.


Similar posts

Comments are closed.