இந்திய பிரதமரை மாநாட்டிற்கு அழைக்கவில்லை யாழிற்கே அழைத்தேன் – மன்னார் ஆயர்

Written by vinni   // November 9, 2013   //

Mannar-Bishopபொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்து இந்திய பிரதமரை தான் அழைக்கவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் தலைவர்களின் வருகை பற்றி என்னிடம் அபிப்பிராயம் என்ன என்று கேட்டார்கள்.

அதற்கு நான் அவர்களுக்கு தெளிவாக கூறியது,

போர் காலத்திலே நடந்தேறிய மனித இன படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் இவற்றை எல்லாம் போரின் போது இலங்கை நாடு செய்து முடித்துவிட்டு நாம் போரை முன்னெடுத்தது பயங்கரவாதிகளை அழிப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு இருப்பதை சரியென்று ஏற்றுக்கொள்வதாக அவர்களுடைய வருகை அமையும் என கூறியிருந்தேன்.

அத்துடன் சர்வதேச சமுகமும் ஐநாவும் இலங்கை தனது நல்லிணக்கப் பயணத்திலே அர்த்தமுடன் ஈடுபடக்கூடியதாக அமைய இன ஒழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் நம்பகத் தன்மையாக விசாரித்து இந்த இன ரீதியான துரோகங்களை ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூறவேன்டும் என்பதற்கு செவிமெடுக்கத் தேவையில்லை என்பதையும் இந்த செய்தியையும் கொடுத்ததாக அமையும்.

எனவே இந்திய பிரதமர் இந்த கூட்டத்திலே பங்குபற்றுவதை நான் விரும்பவில்லை. ஆனால் இந்திய பிரதமர் யாழ்ப்பானத்திற்கு வந்து அங்கே இந்தியாவின் முக்கியமான ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்ட போர் குற்றங்களையும் மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானமற்ற செயல்கள்; என்பவற்றை கண்ணால் பார்த்து பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் குரலுக்கு செவிமெடுப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது.

அவர் அதை செய்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகைதர வேண்டும் என்றே நான் கூறியிருந்தேன்.

ஆனால் இதற்கு மாறாக ஊடகங்களில் நான் அறிக்கையிட்டதாக பத்திரிகைகளில் காட்டப்பட்டுள்ளது.

நான் இந்திய பிரதமரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று சொன்னதாக தீயநோக்கோடு வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதை நான் முற்றும் முழுமையாக நிராகரிக்கிறேன். யாழ்ப்பணத்திற்கு வரவேண்டும் என்பதை திரிவுபடுத்தி பொதுநலவாய மாநாட்டிற்கு வரவேண்டும் என்று சொல்வது மிகவும் அப்பட்டமான பொய் என்றும் உண்மைக்கு மாறான செயல் என்று குறிப்பிட விரும்புகிறேன்.´

என மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.