துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவனால் பரபரப்பு

Written by vinni   // November 9, 2013   //

Kids-with-guns…-அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 9 வயது மாணவர் ஒருவர் சக மாணவர்களிடம் காண்பிப்பதற்காக தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை, பாடசாலைக்கு எடுத்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமையன்று பாடசாலை வாகனத்தில் வந்த அந்த மாணவர், கையில் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்ட வாகன ஓட்டுனர் உடனடியாக பாடசாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார்.

பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த மாணவனை கைது செய்தனர்.

விசாரணையின் போது முதலில் அந்த துப்பாக்கி தனது தாயுடையது என்றும், பின்னர் அந்தத் துப்பாக்கியை பூங்கா ஒன்றிலிருந்து கண்டெடுத்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக அந்த மாணவன் பதிலளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.