சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை முடிவுறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்ட கோத்தபாய!

Written by vinni   // November 9, 2013   //

kottapayaசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை முடிவுறுத்திக் கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைப் பணிகளை முடிவுறுத்திக் கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நேரடியாகவே அறிவுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரண்பாட்டு நிலைமைகளின் போது மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டதாகவும், தற்போது முரண்பாட்டு நிலைமை முடிவுற்றிருப்பதாகவும் கோதபாய தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதுவர் க்ளைன்ட் வில்லியம்ஸினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.