இலங்கை மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – பிரித்தானியா

Written by vinni   // November 9, 2013   //

commanபொதுநலவாயத்தின் முக்கிய நாடு என்ற வகையில் இந்தியா, இலங்கை மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மாநாட்டுக்கு செல்வதன் மூலமே அந்த நாட்டின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் குரல் கொடுக்கமுடியும்.

அந்த நாட்டு அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சு நடத்தமுடியும் என்று உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் பெவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நிறைவேற்றுவதற்காகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் இலங்கை செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்திய பிரதமர் இலங்கை செல்வதை கமரூன் வரவேற்பதாகவும் ஜேம்ஸ் பெவன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.