விசாகப்பட்டினத்தில் காணாமற் போகும் சிறுவர்கள்!

Written by vinni   // November 9, 2013   //

Missing_promo_Titlecardவிசாகப்பட்டினத்தில் காணாமற் போகும் சிறுவயதினரின் எண்ணிக்கை சமீபகாலங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் பணிபுரிந்துவரும் குழந்தை பாதுகாப்புப் பிரிவின் மூலம் சேகரிக்கப்பட்ட கணக்கீடானது கடந்த 2011-12-ம் ஆண்டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 பேர் காணாமற் போயிருந்ததாகக் குறிப்பிடுகின்றது.

அதன்பின் கடந்த ஆண்டு இதே எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை 24 பேர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கும் இந்த அமைப்பு மொத்த எண்ணிக்கையை 77 என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம் பெறப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றி காவல்துறையினரிடமிருந்து தகவல் பெறப்பட்டால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டப்படி காவல்துறை ஒவ்வொரு மாதமும் இதுகுறித்த புள்ளி விவரங்கள், தரவுகளை எங்களுக்கு அறிவித்தல் வேண்டும். ஆனால் இது நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை.

காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும்போதும் எங்களிடம் தகவல் அளிக்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சேர்க்கப்படுகின்றனர்.

குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகளின் அறிவிப்புப் பலகைகளும் காவல் நிலையங்களில் வைக்கப்படுவதில்லை.

காணாமற்போகும் குழந்தைகள் குறித்த அனைத்து விவரங்களும் டிசிபியு மற்றும் சிடபிள்யுசி அமைப்புகளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும் என்று மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி ஏ.சத்யநாராயணா கூறியுள்ளார்.

மேலும், டிசிபியு அலுவலக அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் இந்தக் குழந்தைகளின் அனைத்துத் தகவல்களையும் தங்களின் டிராக் சைல்ட் இணையதளத்தில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.