மருமகளுக்கு சிறுநீரக தானம் கொடுத்த மாமியார்!

Written by vinni   // November 8, 2013   //

mothrlaw_kidneytransfer_002மும்பையின் மாமியார் ஒருவர் தன் இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் வைஷாலி ஷா(35) காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. இதனால் உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் இவரின் கணவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை. இந்நிலையில் வைஷாலியின் மாமியார் சுரேகா ஷா(59) தன் சிறுநீரகத்தை மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுநீரகவியல் மருத்துவர்கள் சுரேகா ஷாவை பரிசோதித்து பார்த்தனர். அவரது சிறுநீரகம், வைஷாலிக்கு பொருத்தமாக இருக்கும் என தெரியவந்ததைத் தொடர்ந்து கடந்த மாத இறுதியில் மும்பையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதில் வைஷாலிக்கு வெற்றிகரமாகமாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மருமகளும், மாமியாரும் சிகிச்சை முடிந்து சில நாள் ஓய்வுக்கு பின் இல்லம் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து வைஷாலி கூறுகையில், எனக்கு உதவிய மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன் என்றும் அவருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மாமியார் கூறுகையில், என் சிறுநீரகம் மருமகளுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எனது மருமகளுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளது என்றும் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு மக்கள் தயங்க கூடாது, உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.