புலிகளை தோற்கடித்த எமக்கு நீங்கள் பெரிய விடயமல்ல: விரிவுரையாளர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி

Written by vinni   // November 8, 2013   //

armyவிடுதலைப்புலிகளை தோற்கடித்த தமக்கு விரிவுரையாளர்கள் பெரிய விடயமல்ல என்று இராணுவ அதிகாரி ஒருவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தினால் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் தங்கியிருந்த அறையொன்றுக்குள் புகுந்த இராணு வீரர் ஒருவர் அவரை பாலியல் வல்லுவுறக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இராணுவத்தினர் நடத்தப்பட்டு வரும் குக்குலே கங்க விடுமுறை விடுதியில் கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இராணுவ வீரர் தன்னிடம் இருந்து மேலதிக சாவியை கொண்டு கதவை திறந்து அறைக்குள் புகுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மாணவி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து இராணுவ வீரர் மின்சாரத்தை துண்டித்துள்ளார்.

மாணவர்களும், விரிவுரையாளர்களும் உடனடியாக இது தொடர்பாக விடுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் “விடுதலைப்புலிகளை தோற்கடித்த எமக்கு நீங்கள் எல்லாம் பெரிய விடயமல்ல” என்று அந்த அதிகாரி இவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவுரையாளர்கள் இராணுவத் தளபதியிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.