கூட்டமைப்பு ஆதரவாளர்களிற்கு நாலாம் மாடியினில் விருந்து!

Written by vinni   // November 8, 2013   //

TNA-logoநடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலினில் கூட்டமைப்பின் வெற்றிக்குப்பாடுபட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் வவுனியா வரை நீடித்திருக்கின்றது.அவ்வகையினில் கடந்த ஒருசில நாட்களுள் மட்டும் சுமார் ஆறு பேர் வரையினில் தற்போது விசாரணைக்கு நாலாம் மாடி சென்றுள்ளனர். அவ்வாறு விசாரணைகளிற்கு சென்றவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களேயென தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிக்கு பாடுபட்ட பலரையும் விரட்டி விரட்டி பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றது.கிளிநொச்சியினில் பகிரங்கமாகவே பலரும் வாள் வெட்டுகளிற்குள்ளாகி உயிருக்கு போராடும் நிலைக்கு சென்றிருந்தனர்.வாகனங்கள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.எனினும் தேர்தல் வெற்றி வரை அவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்திய தரப்புக்கள் மௌனம் காத்தே வந்திருந்தன.

இந்நிலையினிலேயே தற்போது வவுனியாவிலும் வேட்டையாடல்கள் தொடர்கின்றது.முன்னதாக வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட இவர்கள் பின்னர் மேலதிக விசாரணக்கென கொழும்பு நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.