காலனித்துவத்தை பேணும் நோக்கம் கொண்ட‌ பொதுநலவாயத்திலிருந்து இலங்கை விலக வேண்டும் – ஜே.வி.பி

Written by vinni   // November 8, 2013   //

jvp-sri-lankaபொதுநலவாயத்தின் நோக்கம் தொடர்ந்தும் காலனித்துவத்தை பேணுவதாக இருப்பதனால் இலங்கை பொதுநலவாயத்திலிருந்து விலக வேண்டுமென  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று வியாழக்கிழமை கூறியுள்ளது.

இலங்கை இறமையுள்ள நாடு இந்த அமைப்பில் இருப்பது இந்த கூட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதன் தலைமைத்துவத்தை பெரிதாகப் பேசுவதும் இலங்கை இன்னும் காலனியாக இருப்பதை காட்டுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

ராணியே எப்போதும் பொதுநலவாயத்தின் தலைவராக இருப்பார் மாநாட்டின் தலைமைத்துவம் முக்கியமானதல்ல சகல அதிகாரங்களும் இராணியிடமே உள்ளது என அவர் கூறினார்.

பிரித்தானிய நிர்வாகம் ஊவா வெல்லஸவில் படுகொலைகளை செய்து 195 வருடங்களின் பின்னர் இந்த மாநாட்டை இங்கு நடத்துவது முரணகையாக உள்ளது.  சுதந்திரத்துக்காக போராடியதற்காக 1918 இல் பிக்குகள் உட்பட பல தேசாபிமானிகள் கொல்லப்பட்டனர் என அவர் கூறினார்.

பொதுநலவாயத்தின் தலைமைத்துவத்துக்கு உண்மையான அர்த்தமுள்ள தலைமை உண்டாக ராணி அதன் தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் அப்போதுதான் குறைந்தபட்சம் நாடுகள் மீண்டும் காலனித்துவத்தின் கீழ் செல்ல மாட்டாது என அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.