இலங்கையின் தேசிய கொடி எரிப்பு; நாம் தமிழர் கட்சியின் 30பேர் கைது

Written by vinni   // November 7, 2013   //

br.tamilar03இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை கண்டித்தும் வலியுறுத்தி இலங்கையின் தேசிய கொடியை எரித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் 30பேர் கொண்ட குழுவினர் மதுரை விமான நிலையத்தை அடைய முற்பட்டனர்.

பெருங்குடி பகுதியில் நின்ற பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதியிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு பெற்றோல் ஊற்றி எரிக்க முயன்றனர். இதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் நாம் தமிழர் கட்சியினர் இலங்கையின் தேசிய கொடியை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் உட்பட 30 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்


Similar posts

Comments are closed.