நடுவரின் தவறான முடிவா? சச்சின் ஆட்டமிழப்பில் சர்ச்சை

Written by vinni   // November 7, 2013   //

sachin_001இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

முரளி விஜய் 16 ஓட்டங்களுடனும், தவான் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஷிகர் தவான்(23) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய்(26) ஷில்லிங்போர்டு சுழலில் சிக்கினார்.

தொடர்ந்து 199வது டெஸ்டில் களமிறங்கிய சச்சின் 10 ஓட்டங்கள் எடுத்திருந்த போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தற்போது அவரது ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெலிவிசன் ரீபிளேயில் பார்த்தபோது மிகவும் மேலாக செல்வது தெரிந்தது, அதாவது ஸ்டம்புக்கு மேலே செல்லக்கூடிய பந்துக்கு அவுட் கொடுக்கப்பட்டதாகவும், இங்கிலாந்து நடுவர் லாங் தான் அவுட் கொடுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் சச்சின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர், இவரது ஆட்டத்தை காண ஏராளமானவர்கள் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.