காதலியின் ஆபாச புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட காதலன்

Written by vinni   // November 7, 2013   //

facebook-காதலியோடு உல்லாசமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.

யாழ். கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி தற்போது காதல் முறிவடைந்து பிரிந்துள்ளது.

இந்நிலையில் காதலன் காதலியின் ஆபாச புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நாளை (08) வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.