பூமியின் மீது விழப் போகும் செயற்கைகோள்

Written by vinni   // November 7, 2013   //

saterlitesவிண்வெளியில் பழுதடைந்துள்ள செயற்கைகோள் ஒன்று பூமியின் மீது விழப்போகிறது என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் கடல் ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் ஒன்றை செலுத்தியது.

பூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த செயற்கைகோள் எதிர்பாராத விதமாக பழுதடைந்து விட்டது.

இந்நிலையில் இந்த செயற்கைகோள் பூமியை நோக்கி வரத்தொடங்கியுள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமும் 2½ மைல் அது கீழே இறங்கிக் கொண்டிருக்கும் செயற்கைகோள், இன்னும் ஓரிரு நாளில் பூமியின் விழ உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வருகிற 10ம் திகதி நள்ளிரவு அல்லது 11ம் திகதி அதிகாலை விழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறிப்பாக எத்தனை மணிக்கு, எந்த பகுதி மேல் விழும் என்பதை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

எனினும் விஞ்ஞானிகள் செயற்கைகோளை கண்காணித்தபடியே உள்ளனர்.


Similar posts

Comments are closed.