இந்தியா மாநாட்டுக்கு செல்லக் கூடாது :தமிழகத்தில் முழு அடைப்பு

Written by vinni   // November 7, 2013   //

bandh-300இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 12 ஆம் திகதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த மதிமுக உள்ளிட்ட 21 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 12 ஆம் திகதியன்று தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் த.வெள்ளையன் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது 21 அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக சென்னையில் இன்று (07) நடைபெற்ற மேற்கூறிய 21 அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.