இலங்கை இணைய தளங்கள் ஹெக் செய்யப்படக் கூடிய சாத்தியம்?

Written by vinni   // November 7, 2013   //

hackedஇலங்கையின் முக்கிய இணைய தளங்கள் ஹெக் செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை கணனி அவசர பாதுகாப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்க இணைய தளங்களின் மீது ஊடுறுவித் தாக்கக் கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக பிரிவின் பிரதம பொறியியிலாளர் ரொஹான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு குறித்து போதிய விளக்கம் இன்மையே இவ்வாறான தாக்குதல்களுக்காக பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளின் இணைய தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.அடிக்கடி மாற்றியமைக்கப்படாத காரணத்தினால் அரசாங்க இணைய தளங்களை இலகுவில் ஹெக் செய்ய முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்காவதனை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.