இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமாம்!

Written by vinni   // November 7, 2013   //

Narendra-Modi_15இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்கு நரேந்திர மோடி இந்திய பிரதமராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது,

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவ தமிழக மீனவர்கள் தடையாக இருப்பதால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

இந்திய அரசு எல்லா வகையிலும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது.

இந்தியாவை காப்பாற்ற, இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அதற்கு மக்கள் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Similar posts

Comments are closed.