பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர் கைது

Written by vinni   // November 6, 2013   //

mobileபாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உள்ள ஆபாசப்படங்களை காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விடத்தல் தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று (05) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் உத்தரவிட்டார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர், கடந்த மாதம் 28ஆம் திகதி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த ஆபாச படங்களை, அப்பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவருக்கு காண்பித்ததாக கூறி விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் விடத்தல் தீவு பொலிஸார் குறித்த ஆசிரியரை நேற்று (05) கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த ஆசிரியரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் மெமரி சிகாட் ஆகியவற்றை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்புமாறு உரிய தரப்பினரிடம் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.


Similar posts

Comments are closed.