இலங்கைக்கு செய்தி வழங்கப்பட்டுள்ளது

Written by vinni   // November 6, 2013   //

canadaமனித உரிமை தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசாங்கம் தனது தற்போதைய நிலைப்பாடுகளை தொடர முடியாது என்ற தெளிவான செய்தியை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகளுக்காக கனடா தொடர்ந்தும் போராடும் என கனேடிய வெளிவிவகார மற்றும் சர்வதேச மனித உரிமைகளுக்கான செயலாளர் தீபக் ஒப்ராய் குறிப்பிட்டார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் கொழும்பில் நடைபெற உள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.