வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் தொடரில் சதம் அடிப்பாரா சச்சின் ?

Written by vinni   // November 5, 2013   //

sachinஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கர் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் தொடரில் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

40 வயதான தெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 200–வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் விளையாடும் 199–வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

தெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. ஓய்வு பெற இருப்பதால் அவரது சதத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

தெண்டுல்கர் கடைசியாக 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சதம் அடித்து இருந்தார். 146 ரன் குவித்தார்.

அதன்பிறகு தெண்டுல்கர் 21 டெஸ்டில் (38 இன்னிங்ஸ்) விளையாடி விட்டார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 முறையும், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறை டெஸ்ட் தொடர் விளையாடி இருந்தார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான மும்பை டெஸ்டில் 94 ரன்னும், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் 91 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். சிட்னி டெஸ்டில் 80 ரன்னிலும், சென்னை டெஸ்டில் (ஆஸ்திரேலியா) 81 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.

இப்படி சதத்தை நெருங்கி வந்த நிலையில் பலமுறை ஆட்டம் இழந்தார். இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது 199–வது டெஸ்டில் அவர் சதம் அடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தெண்டுல்கர் 12 டெஸ்டில் விளையாடி உள்ளார். 20 இன்னிங்ஸ் 862 ரன் எடுத்துள்ளார். இரண்டு சதமும், 6 அரை சதமும் எடுத்துள்ளார். 176 ரன் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.


Similar posts

Comments are closed.