ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

Written by vinni   // November 5, 2013   //

India-Hockey-Teamஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி இன்று தனது 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

19-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணியின் கோல் கணக்கை துவக்கினார். அதன்பின்னர் 30-வது நிமிடத்தில் தல்வீந்தர் சிங்கும், 62-வது நிமிடத்தில் அமித் ரோகிதாசும் தலா ஒரு கோல்கள் அடித்தனர்.

கடைசி வரை கடுமையாப் போராடிய ஓமன் வீரர்களின் கோல் முயற்சி வீணானது. இதனால் இறுதியில் 3-0 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து தனது வியாழக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.

இந்தியா தனது முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் சீனா மற்றும் ஜப்பானிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.