தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வரும் பயணிகள் விமானமான ட்ரீம்லைனர்

Written by vinni   // November 5, 2013   //

dreamliner_2453133bபோயிங் நிறுவனத்தின் புதிய ரக பயணிகள் விமானமான ட்ரீம்லைனர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக தொடர்ந்து பிரச்சினையை சந்தித்து வருகிறது.

நேற்று ஆஸ்திரேலியா சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம்லைனர் விமானம் மெல்போர்னில் தரையிறங்கியபோது முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று மற்றொரு ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வந்த அந்த விமானத்தின் பிரேக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதை குறிக்கும் வகையில், காக்பிட்டில் உள்ள எச்சரிக்கை விளக்குகள் ஒளிர்ந்தன. இதனால் அந்த விமானம் டெல்லியில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 170 பயணிகள், 10 ஊழியர்கள் பத்திரமாக இறங்கினர்.

பின்னர் விமானத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், தவறாக அலாரம் அடித்தது தெரியவந்தது. ஏற்கனவே தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் போயிங் நிறுவனத்தின் கவலையை அதிகரித்துள்ளது.


Similar posts

Comments are closed.