40 வீதமான சிரியப் பிரஜைகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய நிலiமை ஏற்பட்டுள்ளது – ஐ.நா

Written by vinni   // November 5, 2013   //

syria40 வீதமான சிரியப் பிரஜைகளுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 9.3 மில்லியன் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 6.8 மில்லியனாகக் காணப்பட்டதாகவும் தற்போது இந்த எண்ணிக்கை 9.3 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிரிய குழந்தைகள் பல்வேறு நோய்த் தொற்றுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரியளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மனிதாபிமான தொண்டுகளை சீரான முறையில் மேற்கொள்வதற்கு கிளர்ச்சியாளர்களும், அரச படையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.


Similar posts

Comments are closed.