புலிகள் ஆயுதங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தி இருந்தனர்

Written by vinni   // November 5, 2013   //

ltteதமிழீழ விடுததைலைப் புலிகள் ஆயுதங்களை வைத்தியசாலைகளில் களஞ்சியப்படுத்தியிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவிற்கான அமெரிக்கத் தூதுவர் க்ளைன்ட் வில்லியம்சனினால் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழு விடுதலைப் புலிகள் பொதுமக்களை ஒர் பாதுகாப்பு சொத்தாகப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தங்களது போராளிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு புலிகள் பொதுமக்களைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஆயுதங்கள் இடத்திற்கு இடம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகக் குpறப்பிடப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் தொடர்ச்சியாக சிவிலியன்கள் பிரசன்னமாகி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டனர் என்பது பற்றிய தகவல்களை உறுதியாக குறிப்பிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.