18ம் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கம் உச்ச நீதிமன்றிடம் விளக்கம்

Written by vinni   // November 5, 2013   //

supreme_court_colombo18ம் திருத்தச் சட்டம்  குறித்து அரசாங்கம் உச்ச நீதிமன்றிடம் விளக்கம் கோரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இரண்டு தடவைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை 18ம் திருத்தச் சட்டத்தின் மூலம் திருத்தி அமைக்கப்பட்டிருந்தது. அதாவது இரண்டு தடவைகளுக்கு மேல், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இரண்டாம் தவணைக்காலம் நிறைவு மற்றும் மூன்றாம் தவணைக்கான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விடுக்கும் காலம் பற்றி 18ம் திருத்தச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோரியுள்ளது.

18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தனது இரண்டாம் தவணைக் காலத்தில் நான்கு ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 18ம் திருத்தச் சட்டத்தில் இவ்வாறு இரண்டாம் தவணையின் போது எப்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்க முடியும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.


Similar posts

Comments are closed.