அமெரிக்காவின் நியூஜெர்சியில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு

Written by vinni   // November 5, 2013   //

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெருமளவில் நடந்து வருகிறது. எனவே, துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த சட்டங்களை கடுமையாக்குவதில் அரசு தீவிரமான உள்ளது.

america_shooting_006இந்த நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு பராஸ் நகரில் நார்டு ஸ்ட்ராம், பகுதியில் கார்டன் ஸ்டேட் பிளாகர் என்ற வணிக வளாகத்தில் (ஷாப்பிங் மால்) உள்ளது.

நேற்ற இரவு 9 மணியளவில் வணிக வளாகத்தை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த மர்ம மனிதன் அங்கு பொருத்திருந்த பாதுகாப்பு கண்காணிப்பு காமிராவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியில் சுட்டான்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டன. துப்பாக்கி சூடு நடந்த போது வணிக வளாகத்துக்குள் குறைந்த அளவிலே பொதுமக்கள் இருந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.

அதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வணிக வளாகத்திலும், இதை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். வணிக வளாகத்துக்குள் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், வணிக வளாகத்தில் புகுந்த மர்மமனிதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Similar posts

Comments are closed.