பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானம்

Written by vinni   // November 5, 2013   //

commanபொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அழைப்புகள் அடுத்த சில தினங்களில் மாநாட்டின் ஏற்பாட்டு குழுவினால் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதனை தவிர நாடாளுமன்றத்தில் அங்கம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது அந்த கட்சிகளின் முடிவில் தங்கியுள்ளது. அழைப்பு விடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதால் நாங்கள் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவுள்ளோம் என்றார்.


Similar posts

Comments are closed.