இலங்கையில் ஊடக சுதந்திரம் பல்வேறு வழிகளில் முடக்கப்பட்டு வருகின்றது – கபே

Written by vinni   // November 5, 2013   //

images (2)ஊடகவியலாளர்களுக்கு சவாலான நாடாக இலங்கை மாற்றமடைந்து செல்வது கவலையளிப்பதாக   கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரமானது பல்வேறு வழிகளில் முடக்கப்பட்டு வருகின்ற நிலையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது எனவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரம் குறித்த பல்வேறு சுட்டெண்களில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் கடமையாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

அண்மையில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அவர்கள் நாடு கடத்தப்பட்டமையானது இலங்கை அரசியல் சாசனத்தின் 14ஆம் சரத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என்றார்.


Similar posts

Comments are closed.