பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது – மதுரை ஆதீனம்

Written by vinni   // November 5, 2013   //

commonஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என மத்திய அரசுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த வேண்டும் என முடிவு செய்ததே மிகப்பெரிய தவறு. அப்படிப்பட்ட முடிவுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருக்கக் கூடாது. லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழித்து மனிதாபிமானத்திற்கு வேட்டு வைத்த இலங்கையில், பொதுநலவாய மாநாட்டை நடத்தலாமா.

சின்னஞ்சிறு பாலகன் பிரபாகரனின் மகனை ஈவு இரக்கமின்றி கொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாடு தேவையா? இசைப்பிரியாவை மிகப்பயங்கரமாக கொலை செய்து விட்டு, நாங்கள் இக்கொலையை செய்யவில்லை என பொய்ப்பிரசாரம் மேற்கொள்ளும் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தலாமா? பொதுநலவாய என்ற சொல்லுக்கு பொது சொத்து என்று தான் பொருள்.

அப்படிப்பட்ட இறைவனின் பிள்ளைகளான மனித உயிர்கள் என்ற பொதுச் சொத்தை நாசமாக்கிய இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த அனுமதிக்கலாமா? மத்திய அரசே, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Similar posts

Comments are closed.