தொடர்கிறது வெட்டலின் ஆதிக்கம்

Written by vinni   // November 4, 2013   //

F1_logo_JPGஅபுதாபியில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார்பந்தயத்தில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார்.
பார்முலா-1 கார்பந்தயத்தின் 17வது சுற்றான கிராண்ட் பிரிக்ஸ் போட்டி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல்(ரெட்புல் அணி) 305.470 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை ஒரு மணி 38 நிமிடம் 06.106 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

அவரது சக அணி வீரரான அவுஸ்திரேலியாவின் மார்க் வெப்பர் 30.8 வினாடி பின்தங்கி 2வதாக வந்தார்.

இது இந்த சீசனில் வெட்டல் பெற்ற 11வது வெற்றியாகும். இதில் தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வென்றதும் அடங்கும்.

இதன் மூலம் ஒரு சீசனில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற சக நாட்டு ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின்(2004–ம் ஆண்டில் தொடர்ந்து 7 வெற்றி) சாதனையை வெட்டல் சமன் செய்துள்ளார்.

இன்னும் 2 சுற்று ரேஸ் மட்டுமே உள்ள நிலையில் 17 சுற்று முடிவில் வெட்டல் 347 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் அலோன்சா 217 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர்.


Similar posts

Comments are closed.