மக்களை கொல்வதில் நல்லவனாக இருக்கிறேன்? ஒபாமா

Written by vinni   // November 4, 2013   //

obamaமக்களை கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ள கருத்தானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொள்கிறது.

இதில் பொதுமக்களும் கொல்லப்படுவதாக கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் ஒபாமா கூறியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மேற்கொண்ட பிரசாரம் குறித்த புத்தகம் தான் இந்த கருத்து இடம்பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த மார்க் ஹால்பெரின், ஜான் ஹெய்ல்மென் ஆகிய இரு புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் இந்த நூலை எழுதியுள்ளனர்.

இதில் ஒபாமா குறித்த பல பரபரப்புத் தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான், ஏமன் நாட்டில் செயல்படும் தீவிரவாதிகள் மீது அமெரிக்கப் படையினர் நடத்தும் டிரோன் எனப்படும் ஏவுகணைத் தாக்குதல் குறித்த பல முக்கியத் தகவல்களை இதில் அவர்கள் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதியான பின்னர் மொத்தம் 326 டிரோன் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2004ம் ஆண்டு முதல் டிரோன் தாக்குதல்களில் 2500 முதல் 3600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து தனது நெருங்கிய உதவியாளர்களிடம் ஒபாமா, மக்களைக் கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

இக்கருத்து குறித்து ஜனாதிபதி மாளிகை இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அதேசமயம், ஒபாமாவின் ஆலோசகரான டேன் பீபர், எப்போதுமே தகவல் கசிவுகள் ஜனாதிபதியை எரிச்சலூட்டுகின்றன.

இந்த நூல் குறித்து நான் ஜனாதிபதியுடன் இதுவரை பேசவில்லை, அவரும் இதைப் படிக்கவில்லை.

ஆனால் இப்படிப்பட்ட கசிவுச் செய்திகளை அவர் வெறுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.