இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சி

Written by vinni   // November 4, 2013   //

8bea0ce2-579c-4890-b54d-41aec63fafa6_S_secvpfஜெர்மனி தலைமையேற்று நடத்திய இரண்டாம் உலகப்போர்(1939 – 1945) காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் ஜெர்மனி நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.

சில வேளைகளில் அதிக எடை கொண்ட ராட்சத குண்டுகளும் கிடைப்பதுண்டு. அவ்வகையில், வெடிக்காமல் இருக்கும் 4 ஆயிரம் பவுண்ட் (1800 கிலோ) குண்டு ஜெர்மனியின் முக்கிய தொழில் பிரதேசமான ருர் மாகாணத்தில் சமீபத்தில் கிடைத்தது.

இந்த குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். குண்டுகளை செயலிழக்க வைக்கும் முயற்சி ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போல் ஆபத்தானது என்பதால் டார்ட்மண்ட் நகரில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் மக்களை பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இந்த ராட்சத குண்டு செயலிழக்க வைக்கப்படும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.